இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"காவிரி"யின் முதல் இதழ் பற்றிய அறிவிப்பு.

படம்
~காலாண்டு இதழ் (தனிசுற்றுக்கு மட்டும்) • From Jan-2021.   • ஜனவரியில் வரவிருக்கும் "காவிரி"யின் முதல் காலாண்டு இதழுடன் "பாலி" பதிப்பக வெளியீட்டாக கவிஞர் ராணிதிலக்கின் 7 ஆது கவிதைத் தொகுப்பான "27 கவிதைகள்" இணைப்பாக வெளிவரவுள்ளது. பிகு: காவிரி இதழுடன் மட்டுமே இக்கவிதைத்தொகுதி கிடைக்கும். • விற்பனை நிலையங்களின் விவரங்கள் இதழ் வெளிவந்த பிறகு பதிவிடப்படும். • சந்தா முறை கிடையாது, தனி சுற்றுக்கு மட்டும். விக்ரம், ஆசிரியர்.

சின்னஞ்சிறு நூல் வரிசை -3

படம்
  சின்னஞ்சிறு நூல் வரிசை -3  கொரியக் கவிஞர் கோ யுன் அவர்களின் 24 சிறிய பாடல்கள் (24 LITTLE SONGS BY KO UN IN TAMIL) என்னும்  தலைப்பிலான கவிதைகள், விவேக் கிருஷ்ணன் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியிடப்படுகிறது. இம்மொழியாக்கத்தைச் செப்பனிட்டுத் தந்த கவிஞர் வி.என்.சூர்யாவுக்கும், வடிவமைத்துத் தந்த எழுத்தாளர்  ஜீ.முருகனுக்கும்,  சிறந்த முறையில் அச்சிட்டு அளித்த  நூல்வனம் மணிகண்டன் அவர்களுக்கும் காவிரி தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, கோ யுன் அவர்களின் “24 சிறிய பாடல்கள்” (24 LITTLE SONGS BY KO UN IN TAMIL)  தொகுதியைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.  விக்ரம், ஆசிரியர்.