இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பசி - க.நா.சு

படம்
 பசி- க.நா.சு க.நா.சு எழுதிய முதல் நாவல் சர்மாவின் உயில். ஆனால் முதலில் அச்சுக்கு வந்த நாவல்தான் பசி. நட்ஹாம்சனின் பசியைக் க.நா.சு மொழிபெயர்த்திருப்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் பசி என்ற தலைப்பில் க.நா.சு எழுதிய இந்த நாவல் அதிகம் யாராலும் வாசித்திருக்கமுடியாது.  எனவே, கீழே காணும் படத்தினைச் சொடுக்கி நாவலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தென் ஆப்ரிக்க கதைகள் - நா.தர்மராஜன்

படம்
 தென் ஆப்ரிக்க கதைகள் தென் ஆப்ரிக்க மக்களின் ஏழ்மையான வாழ்வை, சிக்கலான வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் இவை. இவற்றைத் திரு நா. தர்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார்.  கீழே காணும் படத்தினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.     இந்நூலை தான் பணியாற்றும் பள்ளி நூலகத்திலிருந்து படி எடுத்து அளித்த ராணிதிலக் அவர்களுக்கும்,  கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு வை.சாரதி அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி.

பனி படலத்துப் பாவை ~ ந. பிச்சமூர்த்தி ( மொழிபெயர்ப்பு நூல் )

படம்
 பனி படலத்துப் பாவை - ந.பிச்சமூர்த்தி ந.பிச்சமூர்த்தி மொழிபெயர்த்த பனி படர்ந்த பாவை புனைவை அளித்த தமிழாசிரியரும் வாசகருமான கருப்பம்புலம் பாலாஜி அவர்களுக்கு நன்றி. கீழே காணும் படத்தினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

சமயமும் வாழ்க்கையும் ~ ந. பிச்சமூர்த்தி

படம்
 சமயமும் வாழ்க்கையும் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி அவர்கள் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியது மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிந்ததுதான்.  ஆனால் தெரியாத விஷயம் ஒன்று, அவர் ஹெர்பர்ட் வாலஷ்நீடரின் தத்துவ நூலைத் தமிழில் சமயமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் முழு நூலையும் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதுதான். நூல் பற்றிய விவரங்கள் எங்கும் காணப்படவில்லை, சிறுபத்திரிகைகளில் யாராவது எழுதியிருக்கக்கூடும். இந்தப் புத்தகத்தை கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி நூலகத்திலிருந்து, கவிஞர் ராணிதிலக் தந்து உதவினார்.அவருக்கு நன்றி. நன்றி: இப்புத்தகத்தை தந்து வெளியிட உதவிய தலைமை ஆசிரியர் சாரதி மற்றும் ஆசிரியர்களுக்கு - அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி, கும்பகோணம்.  கீழ்க்காணும் படத்தினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.