கருவளையும் கையும் (கு.ப.ராஜகோபாலன் கவிதைகள்)
கும்பகோணத்தில் பிறந்து மறைந்த எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் அவர்களின் நினைவு தினம் இன்று. (27.04.2021). அவருடைய கவிதைகள் தனித்தொகுதியாக இது வரை வெளிவரவில்லை. கருவளையும் கையும் என்ற தலைப்பில் தன் கவிதைத்தொகுதி வரவேண்டும் எனக் கு.ப.ரா. விரும்பியதாக வல்லிக்கண்ணன் குறிப்பிட்டும் இருக்கிறார். இதற்கிடையில் அவருடைய கவிதைகளை, அவரின் புதிய படைப்புகளுடன் இணைத்து வாசகர் வட்டம், “சிறிது வெளிச்சம்” என்ற தலைப்பில் வெளியிட்டது. விடுபட்ட கவிதைகள் சிலவற்றைச் சேர்த்து, காலவரிசைப் படுத்தி, அடையாளம் பதிப்பகம் வழியாக, திரு அ.சதீஷ் , கு.ப.ரா. நாடகங்களும் கவிதைகளும் என்ற தலைப்பில் வெளியிட்டார். காவிரி இதழ் சார்பாக வெளியிடப்படும் இத்தொகுதியில் புதிய கவிதைகள் இரண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இதை அளித்தவர் திரு லக்ஷ்மிபதி அவர்கள். கும்பகோணத்தில் பிறந்து மறைந்த எழுத்தாளர் கு.ப.ரா.வின் நினைவுதினமான இன்று, அவருடைய கவிதைத்தொகுதியை மட்டும் தனியாகத் தொகுத்து, கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டக் காவிரி இதழ், கருவளையும் கையும் என்ற தலைப்பில் சிறிய புத்தகமாக PDF ல் வெளியிட்டு மரியாதை செலுத்...