வங்காளச் சித்தர் பாடல்கள் ~ பவுல் பாடல்கள் - Baul songs.
• "காவிரி" இதழின் சின்னஞ்சிறு நூல் வரிசை 5.
~ ஆசிய - தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியக் கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும் தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகப்படுத்தி அதன் சார்ந்த விவாதங்களை மேற்கொள்ளும் நோக்குடன் ஆரம்பத்திலிருந்தே "காவிரி" இதழ் செயல்பட்டு வருகிறது,
அதன் தொடர்ச்சியாக வங்காள நாடோடி பாடல் அல்லது சித்தர் பாடல் என அழைக்கப்படும் "பவுல்" பாடல்களை ( Baul songs ) பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர் இராமகுருநாதனின் மொழிபெயர்ப்பில் சில தேர்ந்தெடுத்தக் கவிதைகள் தனி அச்சு புத்தகமாக வெளி வந்தது. தற்போது நண்பர்கள் வாசிப்பதற்கு PDF வடிவில். படத்தைச் சொடுக்கி புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
இப்புத்தகத்தை வடிவமைப்பு செய்து தந்து உதவிய எழுத்தாளர்
ஜீ. முருகனுக்கும் அச்சாக்கத்தில் உதவிய நூல்வனம் மணிகண்டனுக்கும் நன்றி.
சிறப்பு
பதிலளிநீக்கு