இடுகைகள்

காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது.

படம்
காவிரி மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது. இதழில் பங்களிப்புச் செய்த படைப்பாளிகளுக்கு நன்றி. இதழ் 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் பனுவல், பரிசல், கலப்பை, ஆதி, தன்னறம், யாவரும் மற்றும் குலுங்க நடையான் அரங்குகளில் கிடைக்கும். இதழ் தேவைப்படும் நண்பர்கள் பனுவல் மற்றும் பரிசல் புத்தகக் கடைகளிலிருந்து இணைய வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.  நன்றி! ~விக்ரம், ஆசிரியர் (Editor)

காவிரி இரண்டாம் இதழ்.

படம்
காவிரி இரண்டாம் இதழ். கடந்த 2024 ஜூனில் வெளி வந்த இதழின் PDF வடிவம். தாமதமாகப் பதிவேற்றம் செய்வதற்கு நண்பர்கள் மன்னிக்கவும். தற்போது நண்பர்களின் வாசிப்பிற்காக பதிவேற்றம் செய்துள்ளேன். இதழை வாசிக்க விரும்பும் நண்பர்கள் மேலே தரப்பட்டுள்ள இணைப்பினைச் சொடுக்கி இலவசமாகத் தரவிறக்கம் செய்து பி.டி.எஃப் (PDF) வடிவில் வாசிக்கலாம். அடுத்த மாதம் மூன்றாம் இதழ், நிறைவான ஓர் இதழாக வெளிவருகிறது. விற்பனை மற்றும் இதழ் கிடைக்கும் விவரங்களை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். இதழ்கள் தொடர்பான விமர்சினங்களை எழுத விரும்பும் வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது தங்களின் வலைதளப் பக்கங்களிலும் எழுதி எனக்குப் பகிரலாம்.  விக்ரம், ஆசிரியர் (Editor)

வங்காளச் சித்தர் பாடல்கள் ~ பவுல் பாடல்கள் - Baul songs.

படம்
 • "காவிரி" இதழின் சின்னஞ்சிறு நூல் வரிசை 5. ~ ஆசிய - தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியக் கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும் தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகப்படுத்தி அதன் சார்ந்த விவாதங்களை மேற்கொள்ளும் நோக்குடன் ஆரம்பத்திலிருந்தே "காவிரி" இதழ் செயல்பட்டு வருகிறது,  அதன் தொடர்ச்சியாக வங்காள நாடோடி பாடல் அல்லது சித்தர் பாடல் என அழைக்கப்படும் "பவுல்" பாடல்களை ( Baul songs ) பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர் இராமகுருநாதனின் மொழிபெயர்ப்பில் சில தேர்ந்தெடுத்தக் கவிதைகள் தனி அச்சு புத்தகமாக வெளி வந்தது. தற்போது நண்பர்கள் வாசிப்பதற்கு PDF வடிவில். படத்தைச் சொடுக்கி புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்கலாம். இப்புத்தகத்தை வடிவமைப்பு செய்து தந்து உதவிய எழுத்தாளர்  ஜீ. முருகனுக்கும் அச்சாக்கத்தில் உதவிய நூல்வனம் மணிகண்டனுக்கும் நன்றி.

ஐரோப்பியச் சிறுகதைகள் - க.நா.சு

படம்
அரிய நூல் க.நா.சு மொழிபெயர்த்த  ஐரோப்பியச் சிறுகதைகள் தரவிறக்கம் செய்ய கீழே காணும் படத்தினைச் சொடுக்குங்கள்

7 யூகோஸ்லாவியாச் சிறுகதைகள்

படம்
 யூகோஸ்லாவியாச் சிறுகதைகள் சாகித்ய அகாதெமி வெளியிட்ட “7  யூகோஸ்லாவியாச் சிறுகதைகள்” தொகுதி அபூர்வமாகக் கிடைத்த ஒன்று. கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து அளிக்கப்படுகிறது.  இப்புத்தகத்தைப் படி எடுக்க அனுமதி அளித்த தலைமையாசியரியர் வை.சாரதிக்கும், ஆசிரியர்களுக்கும், எப்போதும் இம்மாதிரியான செயல்களில் உற்சாகமாக ஈடுபட்டுவரும் கவிஞர் ராணிதிலக்கிற்கும் நன்றி. கீழே காணும் படத்தினைச் சொடுக்கிப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். 

பசி - க.நா.சு

படம்
 பசி- க.நா.சு க.நா.சு எழுதிய முதல் நாவல் சர்மாவின் உயில். ஆனால் முதலில் அச்சுக்கு வந்த நாவல்தான் பசி. நட்ஹாம்சனின் பசியைக் க.நா.சு மொழிபெயர்த்திருப்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் பசி என்ற தலைப்பில் க.நா.சு எழுதிய இந்த நாவல் அதிகம் யாராலும் வாசித்திருக்கமுடியாது.  எனவே, கீழே காணும் படத்தினைச் சொடுக்கி நாவலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தென் ஆப்ரிக்க கதைகள் - நா.தர்மராஜன்

படம்
 தென் ஆப்ரிக்க கதைகள் தென் ஆப்ரிக்க மக்களின் ஏழ்மையான வாழ்வை, சிக்கலான வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் இவை. இவற்றைத் திரு நா. தர்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார்.  கீழே காணும் படத்தினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.     இந்நூலை தான் பணியாற்றும் பள்ளி நூலகத்திலிருந்து படி எடுத்து அளித்த ராணிதிலக் அவர்களுக்கும்,  கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு வை.சாரதி அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி.